உள்ளூர் செய்திகள்

சிக்ரியில் பார்வையாளர் தினம் 15,191 மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கை: காரைக்குடி சிக்ரியில் சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவன நாளை முன்னிட்டு 2 நாட்கள் நடந்த பார்வை யாளர் தினத்தை முன்னிட்டு நடந்த கண்காட்சியை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநில பள்ளிகளில் இருந்து 15,191 மாணவர்கள் பார்வையிட்டனர்.சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவன நாள் விழா ஆண்டு தோறும் செப்., 26ல் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் செப்., 26 மற்றும் 27 ஆகிய நாட்கள் காரைக்குடி சிக்ரியில் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட பொதுமக்கள், மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.அரிமான துறை, பேட்டரி, டெக்னாலஜி, பாலிமர் உள்ளிட்ட துறைகளின் சார்பில் விஞ்ஞானிகள் கண்டறிந்த கண்டுபிடிப்புகளை மாணவர்கள் பார்வையிட்டனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் இருந்து 2 நாட்கள் நடத்தப்பட்ட பார்வையாளர் தினத்தில் 15,191 பேர் பார்வையிட்டுள்ளனர்.பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி, சிக்ரி பி.டெக்., மாணவர்களுக்கு பி.எச்.டி., படிப்பு மேற்கொள்வதற்கான கருத்தரங்கு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்