தேசிய யோகா ஒலிம்பியாட் 16 தமிழக வீரர்கள் தகுதி
தமிழகம், தெலுங்கானா, கேரளா உட்பட்ட, நாட்டின் பல மாநிலங்களில் இருந்து, 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்கின்றனர். இப்போட்டிக்கான மாநில தேர்வு போட்டிகள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை நங்கநல்லுாரியில் உள்ள அரசு பள்ளிகளில் சமீபத்தில் நடந்தன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 38 மாவட்டங்களில் இருந்து, மாவட்டத்திற்கு தலா எட்டு பேர் வீதம் 304 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதிலிருந்து இருபாலரிலும் தலா எட்டு பேர் என 16 வீரர், வீராங்கனையர் தகுதி பெற்றனர். இவர்கள் தமிழகம் சார்பில் டில்லியில் நடக்கவுள்ள தேசிய போட்டியில் பங்கேற்க சென்னையில் இருந்து இன்று புறப்பட உள்ளனர் என மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.