உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் சேர்க்கைக்கு மே 16 முதல் விண்ணப்பம்

சென்னை: "இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, திங்கள் முதல் (16-05-11)  விண்ணப்பம் வழங்கப்படும் என அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார். தமிழகத்தில், 486 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்களில், 65 சதவீத இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை நடத்தி வருகிறது. பிளஸ் 2 தேர்வுகளுக்கான முடிவுகள், மே மாதம் 15ம் தேதி வெளியிட வாய்ப்புள்ளது. எனவே, திங்கள் (16-05-11) முதல் மே மாதம் இறுதி வரை, இன்ஜினியரிங் சேர்வதற்கான விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. கடந்தாண்டு, 2 லட்சத்து 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இந்தாண்டு, கூடுதலாக 15 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பங்கள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக அச்சடிக்கப்படும். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், சென்னை அண்ணா பல்கலை, அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலை, அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள் ஆகியவற்றிலும் விண்ணப்பம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்