உள்ளூர் செய்திகள்

அழகுக் கலைப்பயிற்சி: வரும் 16 முதல் துவக்கம்

தஞ்சாவூர்: "கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அழகுக் கலைப் பயிற்சி வரும் 16ம் துவங்கும்" என மைய இயக்குநர் வெற்றிச்செல்வன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 25 பேருக்கு அடிப்படை அழகுக் கலைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயற்சி வரும் 16ம் தேதி துவங்கி 30 நாட்களுக்கு வழங்கப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதில் சேர விரும்புபவர்கள் நாளை (15ம் தேதி) காலை 10 மணிக்கு மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் பக்கிரிசாமி வீதியில் உள்ள இந்த பயிற்சி மையத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வில் கல்வி, மாற்றுச் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 242377, 242376 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்