மரம் வேரோடு சாய்ந்தது: 16 மாணவர்கள் காயம்
மதுரை: மரத்தடியில் வகுப்பு நடத்தியபோது மரம் சாய்ந்து 16 மாணவர்கள் காயமடைந்தனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத்தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் டிச.14ம் தேதி காலை 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்பு நடந்த போது மரம் வேரோடு சாய்ந்தது. மாணவ மாணவியர் 16 பேருக்கு காயம் அடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.