லயோலா கல்லுாரியில் ஆகஸ்ட் 20 முதல் விளையாட்டு போட்டிகள்
நுங்கம்பாக்கம்: கல்லுாரி, பள்ளி அணிகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள், லயோலா கல்லுாரியில், ஆகஸ்ட் 20 முதல் நடைபெறுகின்றன. லயோலா கல்லுாரி சார்பில், 82வது பெர்ட்ரம் விளையாட்டு போட்டிகள், ஆகஸ்ட் 20 முதல், அதன் வளாக மைதானத்தில் துவங்கி, செப்.1ம் தேதி வரை நடக்கிறது. டென்னிஸ், மேஜைபந்து, பூப்பந்து, வாலிபால், கூடைபந்து, சதுரங்கம் என ஆறு வகையான போட்டிகள் நடக்கின்றன. அதில் 24 பள்ளி அணிகளும், 99 கல்லுாரி அணிகளும் பங்கேற்கின்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடக்கும்.