உள்ளூர் செய்திகள்

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.25 கடைசி நாள்

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்துகிறது. அதன்படி வரும் டிசம்பர் மாதம் 24ம் தேதி நெட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விரும்புவோர் முதலில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.  www.ugc.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறைகளை பற்றித் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் அக்டோபர் 25ம் தேதிக்குள் விண்ணப்பித்த பிறகு, அந்த விண்ணப்பப் படிவம், அனுமதி படிவம், வருகைப் படிவம் ஆகியவற்றை நகல் எடுத்து, விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்வெழுத தேர்ந்தெடுத்த தேர்வு மையத்தில் அக்டோபர் 31ம் தேதிக்குள் நேரில் சென்று அளிக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்