உள்ளூர் செய்திகள்

ஜே.இ.இ., முதன்மை தேர்வு 25 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்: மாவட்ட போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஜே.இ.இ., ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,) முதன்மை, பிரதானம் என இரு பிரிவாக தேர்வை நடத்துகிறது. ஜன., 21 - 30 வரை, முதல் கட்ட தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. ஜே.இ.இ., இரண்டாம் கட்ட தேர்வு ஏப்., 1 - 9 வரை நடக்கவுள்ளது. இதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.தேர்வெழுத விருப்பமுள்ள மாணவர்கள், jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில், 25க்குள் விண்ணப்பிக்கலாம். முதல்கட்ட தேர்வை எழுதியவர்களும் இரண்டாம் கட்ட தேர்வில் பங்கேற்கலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 011 40759000 என்ற எண்ணில் அழைத்து விபரம் தெரிந்து கொள்ளலாம். ஹால்டிக்கெட், தேர்வு மையம் உள்ளிட்ட விபரங்கள் இணையதளத்தில் 'அப்டேட்' செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்