உள்ளூர் செய்திகள்

கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 25ல் பேச்சுப்போட்டி

சென்னை: சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், ஆண்டுதோறும் மாநில அளவில், கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. வரும் 25ம் தேதி, 32ம் ஆண்டு சேக்கிழார் விழா நடக்க உள்ளது.மயிலாப்பூர், சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விழாவில் பேசுவதற்கான தலைப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.வானமும், மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் - காரைக்கால் அம்மையார் புராணம் மற்றும் வேத முதுல்வர் ஐயாற்றில் விரவுஞ் சராசரம் நின்றார் - திருநாவுக்கரசர் நாயனார் புராணம் மற்றும் திருஞானசம்பந்தர் புராணம் போன்றவை, தலைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.போட்டிகள் காலை 9:30 மணிக்கு துவங்கும். முதல் பரிசு 10,000 ரூபாயும், இரண்டாம் பரிசு, 7,500 ரூபாயும், 3ம் பரிசு 5,000 ரூபாயும், ஊக்கப்பரிசுகள் தலா 2,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்