உள்ளூர் செய்திகள்

சந்திரயான் - 3 வெற்றியில் ஒட்டன்சத்திரம் விஞ்ஞானி

ஒட்டன்சத்திரம்: சந்திரயான்-3 வெற்றிக்கு உழைத்தவர்களில் ஒட்டன்சத்திரம் தாலுகாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ரவிச்சந்திரனும் இடம் பிடித்தார்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டி அருகே உள்ள வேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.என்.ரவிச்சந்திரன். அதே ஊரில் அரசு தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து, சத்திரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். பழனி பழனியாண்டவர் பாலிடெக்னிக்கில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டய படிப்பு படித்தார். தொடர்ந்து பெங்களூரு பி.இ.எல்., நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்து டி.ஆர்.டி.ஓ., மேல் பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்று, இஸ்ரோவில் சேர்ந்தார்.பணியிலிருந்து கொண்டே பி.இ., எம்.இ., முடித்தார். இஸ்ரோவில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். தற்போது பெங்களூரில் இஸ்ரோவின் ஜியோ கமாண்ட் எலக்ட்ரானிக் சிஸ்டமில் துறைத்தலைவராக பணிபுரிகிறார். சந்திரயான் - 3 வெற்றியில், இவரது பங்களிப்பும் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. சிறிய கிராமத்தில் பிறந்து, அரசு பள்ளிகளில் படித்து, இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வரும் அவரை கிராமத்தினர், பள்ளி ஆசிரியர்கள் உடன்படித்த மாணவர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்