உள்ளூர் செய்திகள்

முதுநிலை மருத்துவ கலந்தாய்வு; 3 நாட்களுக்கு விடுமுறை

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, மூன்று நாட்கள் விடுமுறைக்குப்பின், மீண்டும், ஏப்., 11ம் தேதி துவங்கும் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரியில், ஏப்., 4ம் தேதி முதல் நடந்து வந்தது. நான்காம் நாளான நேற்று, 89 இடங்கள் ஒதுக்கப்பட்டன; மீதம், 216 இடங்கள் உள்ளன. இன்று யுகாதி விடுமுறை. அடுத்து, சனி, ஞாயிறு என்பதால், மூன்று நாள் விடுமுறைக்குப்பின், ஏப்., 11ம் தேதி, மீண்டும் கலந்தாய்வு துவங்கி, ஏப்., 12ம் தேதி நிறைவடையும் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்