உள்ளூர் செய்திகள்

ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் 30ம் தேதி முதல் வினியோகம்

திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு வரும் ஜூலை 30ம் தேதி முதல் அந்தந்தப் பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்குத் தேர்வு மையங்களிலும் ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகின. அதனைத் தொடர்ந்து, மே 13ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, மாணவர்கள் உயர்படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.இந்நிலையில், ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வினியோகிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டத் தேர்வுகள் துறை உதவி இயக்குனர்களுக்கும் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மூலம் அந்தந்த மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டு, வரும் 30ம் தேதி மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்