உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக் சேர்க்கை வரும் 31 வரை அவகாசம்

கோவை: அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுதும் செயல்படும், 54 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், பல்வேறு பாட பிரிவுகளில், மாணவர்சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு முடித்தவர்கள், தாங்கள் விரும்பும் பாடத்திட்டத்தில், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேரலாம்.தற்போதைய நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், அதிக இடங்கள் காலியாக உள்ளதால், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்