உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் 4.85 லட்சம் மாணவர்கள்

நாடு முழுவதும் உள்ள 15 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சேர ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை (ஐ.ஐ.டி.-ஜே.இ.இ.) சுமார் 4.85 லட்சம் மாணவர்கள் எழுதினர். 15 ஐ.ஐ.டி.களில் உள்ள 9,600 சேர்க்கை இடங்களுக்காக இத்தேர்வு நடைபெற்றது. ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை ஒரு தேர்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை ஒரு தேர்வும் நடைபெற்றது. 131 நகரங்களில் 1,051 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் மே மாதம் 15ஆம் தேதி வெளியாகும். தேர்வு முடிவுகள் வெளியானதும், தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளின் நகலை இணையதளத்தில் காணும் வாய்ப்பு முதன் முறையாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்