முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 50 ஆண்டுக்குப்பின் குதுாகலம்
சென்னை: நங்கநல்லுார் நேரு அரசு உயர்நிலை பள்ளியில், 1976ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர், 50 ஆண்டுக்குப்பின் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.நீலாங்கரையில் நடந்த இந்த சந்திப்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து, 63 முன்னாள் மாணவ, மாணவியர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.தங்கள் பள்ளி நண்பர்கள், தோழியரை பல ஆண்டுகளுக்குப்பின் சந்தித்து, கட்டித் தழுவி, தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். தங்களின் பள்ளிக்காலத்தின் மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.விழாவில், பள்ளி சீருடை அடையாளமாக, முன்னாள் மாணவியர் நீல நிற புடவை; மாணவர்கள் வெள்ளி நிறசட்டை அணிந்து வந்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.அனைத்து மாணவ, மாணவியருக்கும் பள்ளியின் பெயர் பொறித்த, பொன் விழா நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.