உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநிலங்கள் வழக்கு

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான, நீட் மற்றும் ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகள், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, சில மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு பதில் அளித்த, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை, &'இந்த தேர்வுகள், செப்டம்பரில், போதிய பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்படும்&' என, தெரிவித்திருந்தது.இதையடுத்து, தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட மறுத்த உச்ச நீதிமன்றம், &'மாணவர்கள், வாழ்க்கை பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது மிகவும் அவசியம்&' என, தெரிவித்திருந்தது.இந்நிலையில், &'ஜே.இ.இ., - நீட்&' நுழைவுத் தேர்வுகளை இந்தாண்டு நடத்துவதை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம், பஞ்சாப், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகியவற்றின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, இந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்