உள்ளூர் செய்திகள்

முகத்தில் குத்திய ஹெச்.எம்., 7ம் வகுப்பு மாணவன் அட்மிட்

வேலுார்: வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 45. இவரது மனைவி உமா மகேஸ்வரி, 40. இவர்களது மகன் ஸ்ரீஅக்சய்குமார், 12. அதே பகுதியில் உள்ள டி.ஏ.வி., ஐடியல் எனும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.நேற்று முன்தினம் பள்ளி சென்ற மாணவன் ஸ்ரீஅக்சய்குமார், சரிவர படிக்கவில்லை எனக்கூறி, தலைமையாசிரியர் சீனிவாசன் அவரை கண்மூடித்தனமாக தாக்கி, முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், முகம், உதடு வீங்கிய நிலையில் மாணவன் பள்ளி வளாகத்திலேயே நிலை குலைந்தார்.மாணவனுக்கு, பள்ளி ஆசிரியர்கள் முதலுதவி எதுவும் அளிக்காமல், தனி அறையில் வைத்திருந்து பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பினர். மாணவன் முகம் வீங்கிய நிலையில் இருந்ததை கண்டு பதறிய அவரது பெற்றோர், வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பெற்றோர் நேற்று தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, சரிவர படிக்கவில்லை என்று தான் தாக்கினேன். உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சத்துவாச்சாரி போலீசில் நேற்று புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்