புவி கால நேரம்: 7,000 நகரங்கள் பங்கேற்பு
உலகின் தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்த, "எர்த் ஹவர்" எனப்படும் புவி கால நேரம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த, 2007ம் ஆண்டு துவக்கப்பட்ட, புவி கால நேரத்தின் போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 22 லட்சம் கட்டிடங்களில் உள்ள மின் விளக்குகள், ஒரு மணி நேரத்துக்கு, அணைத்து வைக்கப்பட்டன. 2008ம் ஆண்டு முதல் உலகில் உள்ள பல நகரங்களில், புவி கால நேரம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும், 7000 நகரங்கள், புவி கால நேரத்தில் பங்கேற்கின்றன. இம்முறை, பாலஸ்தீன், துனிசியா உள்ளிட்ட நாடுகளும், முதன்முறையாக பங்கேற்க உள்ளன. இந்தியாவில் மட்டும், 150 நகரங்கள், பங்கேற்கின்றன.இவ்வாறு, ரிட்லி கூறினார். உலக புவி நாளை முன்னிட்டு, 7000 நகரங்களில், இன்று மாலை, ஒரு மணி நேரம் மின் விளக்குகள் அணைக்கப்படும். ஒரு மணி நேரம், விளக்குகள் அணைக்கப்படுவதால், கார்பன் உற்பத்தி தடுக்கப்படுகிறது. இதனால், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முதல் ஆஸ்திரேலியாவின் ஓபரா மாளிகை வரை, இன்று மாலை இருட்டில் மூழ்கியிருக்கும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரம், அனைத்து விளக்குகளையும் அணைப்பதன் மூலம், புவி வெப்பமயமாதலைத் தடுத்து, அதன் ஆயுளை நீட்டிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இன்று இரவு 8:30 மணி முதல், 9:30 மணி வரை அனைத்து மின் உபகரணங்கள் மற்றும் விளக்குகளை அணைத்து வைக்கும்படி, டில்லியில் உள்ள மின்சாதன தயாரிப்பாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.