உள்ளூர் செய்திகள்

உடல் திறன் தேர்வில் 93 மாணவர்கள் தேர்வு

தேனி: விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான உடல் திறன் தேர்வு, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைப்பொது மேலாளர் சாந்தன் தலைமை வகித்தார். விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். விளையாட்டு விடுதிகளில் சேருவதற்காக மாவட்டம் முழுவதும் 174 மாணவர்கள், 10 மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான உடல் திறன் தேர்வு நடந்தது. ஓட்டம், வாலிபால், கைப்பந்து, கையுந்துபோட்டி, கபடி, கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவர்களின் உடல் திறன் கண்டறியப்பட்டது. இறுதியில் 87 மாணவர்கள், 6 மாணவிகள்என 93 பேர் தேர்வு செய்யப்பட்டனர். விளையாட்டு அலுவலர் கூறுகையில், தேர்வு செய்யப்பட்ட இருபாலரும் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளுக்காக மாநில அளவிலான தேர்வு போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மதிப்பீட்டு அடிப்படையில் விளையாட்டு விடுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்