ஜில்லுனு ஒரு படிப்பு
இந்தியாவில் பயிற்றுவிக்கப்படும் கிரையோஜெனிக்ஸ் படிப்புகள், அறிவியல் பிரிவில் சிறப்பு வாய்ந்தவை. கிரையோஜெனிக்ஸ் என்பது மிகக் குறைந்த வெப்ப நிலையில் (150 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழ், 238 டிகிரி பாரன்ஹீட், 123 கெல்வின்) உள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்களைப் பற்றி படிப்பதாகும். இதன் மூலம் பொருட்களின் தன்மையைப் பற்றி அறியலாம். பொதுவாக வெப்பநிலைகளை அளப்பதற்கு செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் உள்ளிட்ட வெப்ப அளவீடுகளை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளப்பதற்கு இவை இரண்டையும் பயன்படுத்த முடியாது. இதற்கு பதிலாக கெல்வின் எனும் வெப்ப அளவீடு பயன்படுத்தப்படுகிறது. கிரையோஜெனிக்ஸ்ட் மிகக் குறைந்த வெப்பநிலையில் உள்ள தனிமங்களைப் பற்றி படிப்பவர்கள் கிரையோஜெனிக்ஸ்ட் என அழைக்கப்படுகிறார்கள். கிரையோஜெனிக்ஸ் என்ற வார்த்தை கிரேக்க மொழியை சேர்ந்தது. கடுங்குளிரை உற்பத்தி செய்தல் என்பது இதன் பொருளாகும். கிரையோஜெனிக்ஸ் படிப்புகள் கீழ்க்கண்ட பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கிரையோனிக்ஸ் இறந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளை பதப்படுத்தி எதிர் காலத்தில் உயர்ப்பிப்பது தொடர்பான ஆராய்ச்சி படிப்பாகும். கிரையோஎலக்ட்ரானிக்ஸ் மிகக் குறைந்த வெப்பநிலையில் உள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்களின் மின் கடத்துத்திறன் குறித்து படிப்பதாகும். கிரையோடிரோனிக்ஸ் கிரையோஎலக்ட்ரானிக்சின் செயல்முறை சார்ந்த பயன்பாட்டு படிப்பாகும். கிரையோபயாலஜி மிகக் குறைந்த வெப்பநிலையின் காரணமாக உயிர்ப் பொருட்களில் ஏற்படும் விளைவுகள் குறித்து படிப்பதாகும். அதாவது, உடல்களை பதப்படுத்தப்படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. மற்ற அம்சங்கள்விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளிக்கலத்தின் வேகத்திற்காக கிரையோஜெனிக்ஸ் வாயுக்கள் பெருவாரியாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் ராக்கெட்டின் வேகத்திற்கு திரவ ஹைட்ரஜனை எரிபொருளாக பெரும்பாலும் பயன்படுத்துகிறது. கிரையோஜெனிக்ஸ் உயிர் மருத்துவத் துறையிலும் பயன்படுகிறது. அதாவது தடுப்பூசி மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க பயன்படுகிறது. உலோக தொழிற்சாலைகளில், உலோகங்களின் கடினத்தன்மையை அதிகரிக்கவும் கிரையோஜெனிக்ஸ் பயன்படுகிறது. ஆடைப் பொருட்களை நெகிழச் செய்வதற்கும் கிரையோ ஜெனிக்ஸ் செயல்முறைகள் பயன்படுகிறது. எங்கு படிக்கலாம்முதுநிலைப் பிரிவில் ஆராய்ச்சி வகையில் இப்படிப்பு கற்றுத்தரப்படுகிறது. கீழ்க்கண்ட இந்திய நிறுவனங்கள் ஆராய்ச்சி வடிவில் இப்படிப்பை கற்றுக் கொடுக்கிறது. * ஐ.ஐ.எஸ்.சி., பெங்களூரு (www.iisc.ernet.in)படிப்பு: ரிசர்ச் இன் கிரையோஜெனிக்ஸ் * ஐ.ஐ.டி., காரக்பூர் (www.iitkgp.ac.in)படிப்பு: எம்.டெக்., கிரையோஜெனிக்ஸ் என்ஜினியரிங்.கால அளவு: 2 வருடங்கள். வேலைவாய்ப்புவிண்வெளி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் எரிபொருள் நிறுவனம் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியலாம். இந்தியாவில் இப்படிப்பை முடித்தவர்கள் இஸ்ரோ மற்றும் விக்ரம் சாராபாய் அணுசக்தி மையம் ஆகிய துறைகளில் பணிபுரியலாம். அமெரிக்காவிலுள்ள நாசா ஆராய்ச்சி மையமும், இப்படிப்பை முடித்தவர்களை வேலைக்கு தேர்வு செய்கிறது.