சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான ஹெல்ப்லைன்
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்வெழுதியுள்ள மாணவர்களுக்காக அரசு சாரா நிறுவனம் ஹெல்ப்லைன் சேவையைத் துவக்கியுள்ளது. ஹோப்லைன் என்று அழைக்கப்படும் இந்த சேவை, தேர்வு முடிவு குறித்து மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களுக்கும், அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்த ஆலோசனையையும் வழங்கும். அரசு சாரா அமைப்பான ஸ்னேஹி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாணவர்கள், தேர்வு முடிவினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். தேர்வு முடிவு, பெற்றோருக்கும், அவர்களை சுற்றி உள்ள சமுதாயத்திற்கும் திருப்தி அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்ற அழுத்தத்தை மாணவர்களுக்கு அளிக்கிறது. எனவே, மாணவர்களுக்குத் தேவையான தன்னம்பிக்கையை ஊட்டவும், மன அழுத்தத்தில் இருந்து வெளிக் கொண்டு வரவும் இந்த ஹோப்லைன் உதவும். மே 16 முதல் 31ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த சேவை மையம் இயங்கும். தொலைபேசி எண் 011-26463336. மின்னஞ்சல் மூலமாகவும் மாணவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். hopeline98@gmail.com. என்ற முகவரிக்கு, மாணவர்கள் தங்களது கேள்விகளை அனுப்பினால், உரிய ஆலோசர்களிடம் இருந்து பதில் கிடைக்கும். இதன் மூலம் தற்கொலைகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கவும் முடியும் என்று நம்புகிறோம். கடந்த 13 ஆண்டுகளாக இந்த சேவை மையம் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. கல்வி ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என ஒரு குழு மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டவே இயங்கி வருகிறது.