அனைத்தும் ஆன்லைனில் அறியலாம்
விண்ணப்பப் படிவத்தின் ஒப்புகை நிலை, ரேண்டம் எண், ரேங்க், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைபெறும் தேதி மற்றும் நேரம் என அனைத்து தகவல்களையும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தங்களது விண்ணப்பப் படிவ எண்ணை அளித்து தெரிந்துகொள்ளும் வசதி உள்ளது. இதன்மூலம் தங்களது விண்ணப்பப் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா, ஏற்றுக் கொள்ளப்படவில்லையா, இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் என்ன என்பதையும் ஆன்லைனிலேயே அறிந்துகொள்ளலாம். "கால் லெட்டர்&' கிடைக்காவிட்டாலும் ஆன்லைன் மூலமாக தங்களுக்கான கவுன்சிலின் தேதி மற்றும் நேரத்தை தெரிந்துகொள்ள முடியும். இவைதவிர, மணிக்கு ஒருமுறை காலியிட நிலவரம், கவுன்சிலிங் குறித்த முக்கிய தகவல்களும் இணையதளத்தில் இடம்பெறுகின்றன.