சி.இ.இ.டி., நுழைவுத் தேர்வு
மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம், முதுகலை டிசைனிங் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நுழைவுத்தேர்வில், மாணவர்களின் காரணம் அறியும் திறன், திறமை, படைப்பாற்றல் திறன், படம் வரையும் திறன், ஆங்கில அறிவு போன்றவற்றை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைந்திருக்கும். தேர்வில் வெற்றி பெறுவோர், இந்தியாவில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., போன்றவற்றில் டிசைனிங் மற்றும் அனிமேஷன் படிப்புகளில் சேர்ந்து பயில முடியும். கல்வித் தகுதி: கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் முதுகலை பட்டம், இன்ஜினியரிங் படிப்புகளில் இளங்கலை பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியம். விண்ணப்பப்படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் டவுண்லோடு செய்து அத்துடன் 950 ரூபாய்க்கான டி.டி மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் டிச.4 ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு என்ற www.iitb.ac.in/gate இணையதளத்தை பார்க்கலாம்.