ஐ.ஏ.எஸ். முக்கியத் தேர்வு
அரசு உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முக்கியத் தேர்வு சனிக்கிழமையன்று துவங்கியுள்ளது. சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் சனிக்கிழமை நடைபெறும் முக்கியத் தேர்வை எழுதுகின்றனர். சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி உட்பட பல மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. சனிக்கிழமை காலையில் பொது அறிவு முதல் தாள். பிற்பகல் 2 மணிக்கு பொது அறிவு 2ம் தாள் தேர்வு நடைபெறும். தொடர்ந்து தேர்வு நவம்பர் 26ம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த முக்கியத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.