உள்ளூர் செய்திகள்

உடற்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

இச்சங்கத்தின் மாநில தலைவர் ரவிச்சந்தர், தலைமை தாங்கினார்.தமிழக முதல்வர், விளையாட்டுத் துறைக்காக, சட்டசபை விதி, 110ன் கீழ், கடந்த கூட்டத்தொடரில், பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனாலும், போதுமான எண்ணிக்கையில், உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பை வெளியிடவில்லை. 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என, அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் பின்பற்றப்படுகிறது. ஆனால், உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டும், ஒரு ஆசிரியருக்கு, 1,000 மாணவர்கள் என்ற நிலை உள்ளது.இந்த நிலை மாறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, மாநிலம் முழுவதிலும் இருந்து, 500க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., லிங்கமுத்து பங்கேற்று பேசியதாவது: உடற்கல்வி ஆசிரியர் பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு, அதிகாரிகள் கொண்டு செல்லவில்லை. ஆனால், இந்த பிரச்னையை, இந்திய கம்யூ., சட்டசபையில் எழுப்பும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்