காமராஜ் கல்லூரிபட்டமளிப்பு விழா
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரிப் புரவலர் நாகராஜன் தலைமை வகித்தார். நிர்வாகக் குழுத்தலைவர் வெற்றி, செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் அனந்த் ஆச்சாரி, டீன் சாருகேசி முன்னிலை வகித்தனர். இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் சத்திய மூர்த்தி, பட்டங்களை வழங்கி பேசி னார். அண்ணா பல்கலை தரவரிசைப் பட்டிய லில் இடம் பெற்ற மாணவர் களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. 573 இளநிலை, 63 முதுநிலை மாணவர்கள் உட்பட மொத்தம் 636 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.