உள்ளூர் செய்திகள்

தாய்மொழிக்கு முக்கியத்துவம் வேண்டும்

வீடியோ கான்பரன்ஸ்நேற்று &'தெலுங்கு மொழி தினம்&' என்பதையொட்டி, தென் ஆப்ரிக்காவில் உள்ள தெலுங்கு அமைப்பின் சார்பில், &'நம் மொழி, நம் சமூகம், நம் கலாசாரம்&' என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது.இக்கருத்தரங்கில், டில்லியிலிருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றுப் பேசியதாவது:உலகின் எந்த நாட்டிலும் வாழக்கூடிய தெலுங்கு மக்கள் ஒவ்வொருவருமே, தெலுங்கு மொழிக்கு, முக்கியத்துவம் அளித்தாக வேண்டும். அன்றாட வாழ்க்கையில், தாய்மொழியின் அவசியத்தை உணர்ந்து வாழ்வதே, அம்மொழியின் வளர்ச்சிக்கு உதவும்.ஒரு சமூகத்தின் நாகரீத்தை, ஒரு மொழியின் வாயிலாகவே தெரிய முடியும். மொழிதான், அடையாளமாக இருக்க முடியும். ஒவ்வொரு மொழியின் மிகச்சிறந்த பாரம்பரியமும், செழுமையும் காப்பாற்றப்பட வேண்டும். அந்த மொழியை, அடுத்த தலைமுறையினருக்கும், வீரியமாக கொண்டு செல்வதே, இதற்குரிய ஒரே வழி. புரிதல் வேண்டும்உலகமயமாதல் காரணமாக, உலகம் முழுதும், நிறைய மொழிகள் ஓரங்கப்பட்டு வலுவிழந்து கொண்டே வருகின்றன.இதே நிலை நீடித்தால், அந்த மொழிகள் எல்லாம், காலப்போக்கில் அழிந்துவிடும்.அதேசமயம், ரஷ்யா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள், தங்களது மொழிகளை அனைத்து துறைகளிலும் முதன்மைபடுத்துவதால், பிற வளர்ந்த நாடுகளுக்கு, கடும் போட்டியையும், சவாலையும் தரக்கூடிய நிலைமைக்கு வளர்ந்து நிற்கின்றன. ஒரு சமூகம் மேம்பட, அதற்கு அடித்தளமாக, மொழியும் கலாசாரமும்தான் இருந்தாக முடியும். நிர்வாகம் உட்பட எந்த துறையாக இருந்தாலும், அவரவர் தாய்மொழிக்கே, முக்கியத்துவம் அளித்து, ஊக்கப்படுத்த வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில், அந்தந்த மொழிகளுக்குரிய கலைச் சொற்களை உருவாக்கி, எளிமைப்படுத்த வேண்டும். அப்போதுதான், சாதாரண மனிதர்களும்கூட, அவற்றை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு, வெங்கையா நாயுடு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்