நீட் தேர்வு முடிவு?
இந்த ஆண்டுக்கான தேர்வு, செப்., 12ல் நாடு முழுதும் நடத்தப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வுக்கான வினாத்தாளின் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பும், மாணவர்களின் விடைத்தாளும், ஒவ்வொரு மாணவருக்கும் சமீபத்தில் வழங்கப்பட்டன. இதை பார்த்து, மாணவர்கள் தங்களுக்கான உத்தேச மதிப்பெண்ணை அறிந்தனர். ஏதாவது, சில விடைக்குறிப்புகளில் மாறுதல் இருந்தால் மட்டும், இறுதி முடிவில், மதிப்பெண்ணில் சில மாறுதல் ஏற்படும்.இந்நிலையில், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண், &'கட் ஆப்&' விபரங்கள், நாளைக்குள் வெளியிடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகளை, www.nta.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.