விடை தொகுப்பு வெளியீடு
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள, 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, மார்ச், 8, 16ல், &'ஆன்லைன்&' தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முதற்கட்ட விடை தொகுப்பு, அக்., 21ல் வெளியிடப்பட்டது.தற்போது, சரிபார்ப்பு பணிகள் முடிந்து, விடைகளின் இறுதி தொகுப்பு, நான்கு பிரிவுகளாக வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை, வனத்துறையின், www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பதாரர்கள் பார்க்கலாம் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.