வள்ளுவருக்கு மோடி புகழாரம்
புதுடில்லி: திருவள்ளுவர் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழில் வெளியிட்டுள்ள, &'டுவிட்டர்&' பதிவில், &'தமிழ் கவிஞரும், தத்துவ ஞானியுமான திருவள்ளுவரை வணங்குகிறேன். பல தலைமுறையினரும், அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு உள்ளனர். சிக்கல்களில் இருந்து விடுபடும் ஞானம் வழங்கும் திருக்குறளை, நாடு முழுதும் உள்ள இளைஞர்கள் படிக்க வேண்டும்&' என, கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தமிழில் வெளியிட்டுள்ள &'டுவிட்டர்&' பதிவில், &'சமூகம், அரசியல், தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றில் பலதரப்பட்ட மக்களை, திருவள்ளுவர், தன் கருத்தால் கவர்ந்துள்ளார். நம் தமிழ் இலக்கியத்திற்கு திருவள்ளுவர் செய்த பங்களிப்புக்காக, அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்&' என, தெரிவித்துள்ளார்.