கீழடி அகழாய்வு துவக்கம்
சென்னை: சிவகங்கை மாவட்டம் கீழடியில், ஏழாம் கட்ட அகழாய்வு பணி, இன்று துவங்குகிறது.சிவகங்கை மாவட்டம், திருபுவனம் ஒன்றியம் கீழடி கிராமத்தில், 110 ஏக்கருக்கும் அதிகமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, சங்க காலத்தைச் சேர்ந்த தொல்லியல் மிச்சங்கள் உள்ளன. இவற்றை, 2014 -- 2015ல், மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, அகழாய்வு செய்து வெளிப்படுத்தியது.மத்திய தொல்லியல் துறை, இரண்டாண்டுகள் அங்கு அகழாய்வு செய்து முக்கிய தொல்பொருட்களை கண்டறிந்தது; பின், அகழாய்வைக் கைவிட்டது.இந்நிலையில், மத்திய அரசின் தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவான, &'கபா&'வின் அனுமதியைப் பெற்று, 2016 --2017ல், தமிழக தொல்லியல் துறை அகழாய்வைத் தொடங்கியது.இதன்படி, கீழடியின் ஏழாம் கட்ட அகழாய்வை, முதல்வர் இ.பி.எஸ்., இன்று காணொலி வாயிலாக துவக்கி வைக்கிறார்.