உள்ளூர் செய்திகள்

கபடியில் இளைஞர் சாதனை

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள தோளூர்தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் இன்டர்நேஷனல் கபடி போட்டியில் தங்கம் வென்றார்கணேஷ் பிரபு, 21.பரமக்குடி பள்ளியில்படித்து மதுரை கல்லுாரி படிப்பை முடித்தார். கபடியில் ஆர்வம் செலுத்தி உள்ளார். கோவாவில் நடந்த மாநில கபடி போட்டியில் முதலிடம் பெற்று, இன்டர்நேஷனல் போட்டிக்கு தேர்வானார். மார்ச் 19 வரை நேபாள் போக்ரா நகரில் நடந்த போட்டியில், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், உ.பி., மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்த 128 பேர் கலந்து கொண்டுஉள்ளனர்.இதில் ராமநாதபுரம்மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் பிரபுவுடன்சேர்த்து 14 பேர் அகாடமி அணி சார்பில் பங்கேற்றனர். இவர்கள் இறுதிப்போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்றனர். சொந்த ஊர் திரும்பிய இளைஞருக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்