விவசாயிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி பண்ணை அறிவுரைப்பணி திட்டத்தில் மாணவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.ரெட்டியார்சத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வக்குமார், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி துணை பேராசிரியர் பிரபு வழிகாட்டுதலின் படி, இறுதி ஆண்டு மாணவர்கள் மாரிமுத்து, ஜீவபிரசாந்த், கார்த்திக் ராஜா, முகமது பிலால், நவீன்குமார், பிரத்திக்குப்தா, லட்சுமணன் விவசாயிகளை சந்தித்து பிரச்னைக்கு தீர்வு வழங்கினர்.வெங்காயம், பாகற்காய், மிளகாய், செண்டு மல்லி, வெண்டைக்காயை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டது.