சி.ஐ.சி.எஸ்.இ., தேர்வு தள்ளிவைப்பு
டில்லி ராஜஸ்தான் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களின் கல்வி வாரியங்கள் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை தள்ளி வைத்துள்ளன. இந்நிலையில் சி.ஐ.சி.எஸ்.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி கெர்ரி அரதுான் கூறியதாவது:கொரோனா பரவல் காரணமாக மே 4ம் தேதி சி.ஐ.சி.எஸ்.இ., பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது தேர்வு நடத்துவது என்பது குறித்து ஜூன் முதல் வாரம் ஆய்வு செய்யப்படும்.மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இரு வாய்ப்புகள் வழங்கப்படும். அவர்கள் விரும்பினால் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதலாம் அல்லது நிர்வாகத்தின் வெளிப்படையான மதிப்பீட்டு வழிமுறையை தேர்ந்தெடுக்கலாம். பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு தேதி பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.