உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்

தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுவதற்கான ஜெயித்துக்காட்டுவோம் கல்வித்திருவிழா உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நடந்தது. சாரதா ஆசிரம தலைவர் யத்தீஸ்வரி ராமகிருஷ்ணபிரியஅம்பா, தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன், வீராம்பட்டினம் சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் வீரப்பன், பண்டசோழநல்லூர் தலைமை ஆசிரியர் பசுபதிராஜன், விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலு ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கருத்துரை வழங்கினர். மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதவும், அதிக மதிப்பெண் பெறுவதற்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.   தினமலர் சார்பில் நோட்டு புத்தகங்கள், கேள்விகள் இதோ மற்றும் புளுபிரிண்ட், உடம்பும் மனசும் நல்லாயிருக்கணும் உட்பட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலளித்தவர்கள் மற்றும் அதிகாலையில் நிகழ்ச்சிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.   நிகழ்ச்சி நடந்த சாரதா ஆசிரமத்திற்கு தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளி சார்பில் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து இலவச பஸ்கள் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்