உள்ளூர் செய்திகள்

தினமலருக்கு மாணவியர் நன்றி

தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, சாதனை படைத்த மூன்று மாணவிகளுக்கும் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் உருவம் பொறித்த வெள்ளி பதக்கங்களை அணிவித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினார்.அகல்யா பேசும்போது, கடந்த ஆண்டு இதே ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு நான் வந்திருந்தேன். தேர்வில் சாதித்ததற்காக, பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.இதற்காக, தினமலருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாவட்டத்தில் முதலிடம் பெற்றதற்காக, மேயர் லேப்-டாப் கம்ப்யூட்டரை பரிசாக வழங்கினார். துணை முதல்வர், 5,000 ரூபாயை பரிசாக வழங்கினார். இதேபோல், நீங்களும் பரிசு பெற வேண்டும் என்றார்.அபர்ணா பேசும்போது,வாழ்க்கையில் இலக்கை நிர்ணயித்து, அதை அடையும் நோக்கில் செயல்படுங்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்