உள்ளூர் செய்திகள்

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருது வழங்கி வருகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவைகள், வர்த்தகம், தொழில் போன்ற துறைகளில் சிறந்த சாதனைகள், சிறப்புமிக்க சேவை செய்தவர்கள். இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இனம், தொழில், பதவி, பாலின வேறுபாடுகள் இன்றி, அனைவரும் விருது பெற தகுதியானவர்கள். வரும் 2024ம் ஆண்டுக்கு இவ்விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள், மாவட்ட சமூக நல அலுவலகம், தரை தளம் எண் 5, பழைய கட்டடம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கோவை என்ற முகவரியில் விண்ணப்பம் பெறலாம். ஜூலை 10க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்