உள்ளூர் செய்திகள்

கரையானுக்கு இரையாகும் புத்தகங்கள்

பரமக்குடி:  தமிழக அரசு பரமக்குடி கிளை நூலகத்திற்கு முறையாக இடம் தேர்வு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என வாசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மழை நீரினால் ஒன்றரை லட்சம் புத்தகங்கள் கரையானுக்கு இரையாகி வருவதுடன், மழை நீர் கட்டடத்தில் புகுந்து வீணாகிறது. சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்று கிளை நூலகத்திற்கு அரசு இடம் தேர்வு செய்த நிலையில் இறுதியாக அரசு கல்லூரி அருகில் உள்ள பொதுப்பணித்துறை இடத்தில் நூலகம் கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.இதில் 2022 ஏப்.,ல் மாவட்ட நிர்வாகம் சார்பில் 6150 சதுர அடி இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் சகல வசதிகளுடன் நூலகம் அமையும் என வாசகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இன்று வரை அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாமல் அனுப்பப்பட்ட கோப்புகள் அனைத்தும் உறங்குகிறது. நூலகத்தில் 7000 வாசகர்கள் உள்ள நிலையில் போட்டி தேர்வுக்கு 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குறுகிய இடத்தில் அமர்ந்து புத்தகங்களை படிக்கின்றனர். எனவே ஒவ்வொரு ஆண்டும் அரசு புத்தக திருவிழாவை நடத்தி வரும் நிலையில், தற்போது கருணாநிதி நுாற்றாண்டு விழா அரசு சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே தமிழக அரசு பரமக்குடி கிளை நூலகத்திற்கு முறையாக இடம் தேர்வு செய்து புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும், என வாசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்