உள்ளூர் செய்திகள்

கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு

வால்பாறை: வால்பாறை அரசு கல்லுாரியின் முதல்வராக சிவசுப்ரமணியன் பொறுப்பேற்றார்.வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வராக பணிபுரிந்து வந்த செல்வமுத்துக்குமாரசாமி, சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லுாரி முதல்வராக பணி மாறுதலில் சென்றார். இதனையடுத்து, உடுமலைபேட்டை அரசு கலைக்கல்லுாரியில் கணிதவியல் துறையில் பணிபுரிந்த பேராசிரியர் சிவசுப்ரமணியன், வால்பாறை அரசு கல்லுாரி முதல்வராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய முதல்வருக்கு கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்