உள்ளூர் செய்திகள்

விமானப்படையில் சேர வாய்ப்பு

சென்னை: இந்திய விமானப் படையில் இணைந்து சேவையாற்ற விரும்பும் இளைஞர்கள், வரும் 17ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வதற்கான அக்னிபத் திட்டம், 2022ல் செயல்பாட்டுக்கு வந்தது. அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேரும் இளைஞர்களுக்கு, அக்னிவீர் வாயு என பெயரிடப்பட்டுஉள்ளது. விமானப் படையில் சேர விரும்பும் 17.5 வயது முதல், 23 வயது வரை உள்ள இளைஞர்கள், https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில், வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என, இந்திய விமானப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்