உள்ளூர் செய்திகள்

களைகட்டும் கல்வி சுற்றுலா

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பல்லவர் கால பாரம்பரிய கலைச்சின்னங்கள், சுற்றுலா பயணியரை கவர்ந்து வருகின்றன.இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடவரைகளை காண, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், கல்வி சுற்றுலாவாகவும் அவ்வப்போது வருவர். தற்போது, பள்ளி வாகனங்கள், சுற்றுலா பேருந்து ஆகியவை, சில நாட்களாக மாமல்லபுரத்திற்கு படையெடுத்து வருகின்றன. கலைச்சிற்பங்கள், ஆங்கிலேயர் கால கலங்கரைவிளக்கம், கடல்சார் அருங்காட்சியகம் மற்றும் கடற்கரையை மாணவர்கள் கண்டு ரசித்து, மாமல்லபுரத்தின் வரலாற்றை கேட்டு ஆச்சரியப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்