சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ.,
கோவை: பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றுகளை, கலெக்டர் நேற்று வழங்கினார்.கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மலையடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிணத்துக்கடவு ஒன்றியம் கோதவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி துவக்கப்பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கு, ஐ.எஸ்.ஓ., 9001:2015 என்ற தரச்சான்றை, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று வழங்கினார்.ஐ.எஸ்.ஓ., தரச்சான்று இயக்குனர் கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பாஸ்கர், உதவி கணக்கு அலுவலர் சந்திரபிரியா உட்பட பலர் உடனிருந்தனர்.