சிறுதானிய மதிப்பூட்டல் பயிற்சி
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி வேளாண் அறிவியல் மையத்தில் சிறு தானியங்களில் மதிப்பூட்டிய பொருட்கள் தயாரிப்பு குறித்து தொழில் முனைவோருக்கான 5 நாட்கள் பயிற்சி நடந்தது.ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். உதவி பேராசிரியர் செல்வி சிறுதானிய பயிர்களின் சத்துகள் குறித்து பேசினார். உழவன் உணவக செயலாளர் பாலாஜி சிறுதானிய சிற்றுண்டி உணவு தயாரிப்பு குறித்து பயிற்சியளித்தார். தொழில்முனைவோர் வளர்மதி, நபார்டு நிர்வாக அதிகாரி பரத், உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி, உதவி பேராசிரியர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் பாக்கியத்து சாலிகா பேசினர். இணைப் பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.திட்ட உதவியாளர்கள் விஜயலலிதா, ரம்யா, இளநிலை ஆராய்ச்சியாளர்கள் சுமதி, புவனேஸ்வரி, தொழில்நுட்ப திட்ட உதவியாளர்கள் மூவேந்திரன், மாரிமுத்து ஏற்பாடுகளை செய்தனர்.