அண்ணா பதக்கம் அறிவிப்பு
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு ஆண்டுதோறும் வீர, தீர செயல்களில் ஈடுபட்டு, உயிர்களையும், அரசு சொத்துக்களையும் பாதுகாத்த பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கு அண்ணா பெயரில் பதக்கம் பதக்கம் வழங்கி சிறப்பித்து வருகிறது.இவ்விருது பெறுபவருக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள தங்கமூலாம் பூசிய பதக்கமும், 25,000 ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு அண்ணா பதக்கத்தினை முதல்வர் கருணாநிதி, வரும் 26ம் தேதி குடியரசு தின விழாவின்போது வழங்குகிறார்.இந்த ஆண்டிற்கான அண்ணா பதக்கம் விருது, ஆசிரியர் சுகந்தி மற்றும் 108 ஆம்புலன்சின் தொழில்நுட்ப உதவியாளர் கண்ணன் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.