டி.என்.பி.எஸ்.சி எழுத்துத் தேர்வு
சென்னை: உரிமையியல் நீதிபதி தெரிவிற்கான டி.என்.பி.எஸ்.சி முதன்மை எழுத்துத் தேர்வு நவ.,4, 5 ல் நடைபெறுகிறது.டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தமிழ்நாடு மாநில நீதிப் பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி தெரிவிற்கான முதன்மை எழுத்துத் தேர்வு நவ.,4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் நடைபெறுகிறது.விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல்லை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.