ஓவியப்போட்டியில் மாணவர்கள் அசத்தல்
கோவை: ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஓவியப்போட்டியில் மாணவ, மாணவியர் தங்களது ஓவியத் திறனால் அசத்தினர்.இதில், 6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு மேகம் கருக்குது; மழை வர போகுது, மண் வளம் வண்ணக்கலவையில், 9, 10ம் வகுப்புக்கு சித்திரம் பேசுதடி, பேசும் படம், வண்ண கலவையில் ஹைனா, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு தமிழ் மண்ணில் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைப்புகளில், ஓவிய போட்டி இடம்பெற்றது.மாணவ, மாணவியர், 70 பேர் பங்கேற்று அசத்தினர். பள்ளி ஓவிய ஆசிரியர் வாசுதேவன், ரங்கநாதபுரம் மாநகராட்சி பள்ளி ஆசிரியர் ரமேஷ், வடகோவை மாநகராட்சி பள்ளி ஓவிய ஆசிரியர் ஆட்டனி ஆகியோர் நடுவர்களாக இருந்து, போட்டியை நடத்தினர்.முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, தலைமையாசிரியர் சுந்தர்ராஜன், டி.டி.ஆர்., வெங்கட்ரமணன் அறக்கட்டளை நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர். பள்ளி ஆசிரியை விக்டோ ஜெர்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.