உள்ளூர் செய்திகள்

படிப்பை பாதியில் நிறுத்தலாமா?

கடந்த 5 ஆண்டுகளில் 13,600 இடஒதுக்கீடு பிரிவு மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி.,, ஐ.ஐ.எம்., போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து கல்வியை பாதியில் விட்டு வெளியேறி உள்ளனர்.மத்திய பல்கலைக்கழகங்களில், 4,596 ஓ.பி.சி., மாணவர்கள், 2,424 எஸ்.சி., மாணவர்கள், 2,622 எஸ்.டி., மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். ஐ.ஐ.டி.,யில் 2,066 ஓ.பி.சி., மாணவர்களும், 1,068 எஸ்.சி., மற்றும் 408 எஸ்.டி., மாணவர்களும் வெளியேறியுள்ளனர். அதேபோல், ஐ.ஐ.எம்.,களில், 163 ஓ.பி.சி., 188 எஸ்.சி., மற்றும் 91 எஸ்.டி., மாணவர்கள் பாதியில் வெளியேறி உள்ளனர்.மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ரித்தேஷ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் இத்தகைய புள்ளிவிவரங்களை பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்