கைத்தறி டிசைனில் வல்லவரா?
திருப்பூர்: மாநில அளவில், சிறந்த கைத்தறி டிசைன்களை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்கள், டிசைன் உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் ஜவுளி தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர், வரும் 31ம் தேதிக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் கைத்தறி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் டிசைன்களை சமர்ப்பிக்கவேண்டும். வடிவமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள், www.loomworld.in என்கிற இணையதளத்தில் உள்ளது.தேர்வு செய்யப்படும் முதல் மூன்று டிசைன்களுக்கு, முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு, 75 ஆயிரம், மூன்றாம் பரிசு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விவரங்களுக்கு, 0421 2971115 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.