வேளாண் பல்கலையில் பயிற்சி
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை சிறுதானியங்களில் இருந்து, மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்களை தயாரிக்கும் பயிற்சி, இன்றும், நாளையும் நடக்கிறது.இப்பயிற்சியில், பாரம்பரிய உணவுகள், பிழிதல், பேக்கரி பொருட்கள், உடனடி தயார்நிலை உணவுகள் தயாரிப்பு குறித்து, வல்லுநர்கள் பயிற்சி அளிப்பார்கள். ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் செலுத்தி பங்கேற்கலாம்.பயிற்சி காலை, 9:00 முதல் 5:00 மணி வரை நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, 94885-18268 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.