மாநகராட்சிகளில் இலவச வைபை
சென்னை: சென்னை போன்று மற்ற அனைத்து மாநகராட்சிகளிலும், 1,000 இடங்களில் இலவச வைபை சேவை வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின் அலுவலக திட்டத்தை விரிவுபடுத்த, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.எல்காட் வாயிலாக மாநில தரவு மையம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 200 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படும்சென்னை போன்று மற்ற அனைத்து மாநகராட்சிகளிலும், 1,000 இடங்களில் இலவச வைபை சேவை வழங்கப்படும்செயற்கை நுண்ணறிவு என்ற ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதல்களையும், இதற்கான வரையறைகளை வகுக்கவும், முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும்கோவை விளாங்குறிச்சியில், 1,100 கோடியில், 20 லட்சம் சதுர அடியில், இரண்டு கட்டங்களாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.